பிரபல ஹாலிவுட் நடிகை ரக்கேல் வெல்ச் (82) காலமானார். 60களில் ஹாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் ரக்கேல். தி த்ரீ மஸ்கீட்டர் படத்துக்காக 1974ல் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்கு வழங்கப்பட்டது. புகழ்பெற்ற ‘ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’ படத்தில் இவரது போஸ்டர் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கும். அவரது மறைவுக்கு ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.