வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சியில் புதூர் கொல்லை மேடு பகுதியில் நாகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், ஹரிணி(17) என்ற மகளும் விஜயகுமார்(13) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களாக இவர் மேஸ்திரி தோப்பு பகுதியில் பால் கொள்முதல் நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 15 வருடங்களாக வீடு, வீடாக சென்று பால் கொள்முதல் செய்து வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே தொழிலில் போட்டி ஏற்பட்டு முன்விரோதம் வளர்ந்துள்ளது. இதற்கிடையை அவ்வபோது அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு நாகேஷ் பால் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமடக்கிய மர்ம நபர் மார்பு மீது தாக்கி கத்தியால் நாகேஷின் கழுத்து பகுதியில் வெட்டியதாக கூறப்படுகிறது. இது சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் நாகேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.