பணம் பறிக்கும் நோக்கில் போக்சோ சட்டத்தை பயன்படுத்திய பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து வாழும் நிலையில், தனது உறவுக்காரருடன் நெருங்கி பழகினார். இதனால் அவரிடம் பல்வேறு சூழ்நிலைகளில் கைமாற்றாக 5 லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளார்.

அந்த தொகையை திருப்பி கேட்டபோது, தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரளித்தார். இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரருடன் உறவில் இருந்துள்ள பெண் பல முறை அவரை மிரட்டி பணம் பறித்துள்ளதால் அவரை அப்பாவி என கூற முடியாது என தெரிவித்துள்ளார்.