உலகளவில் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள்.  இந்நிலையில் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களில் வாட்ஸ்அப் சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 முதல் ஆண்ட்ராய்டு 4.1 OS போன்களுக்கான ஆதரவை நிறுத்துவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இந்த பதிப்பில் உள்ள போன்கள் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், யாராவது இதைப் பயன்படுத்தினால், அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.