காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டத்தில் சர்பால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சுரங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 172 தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டனர்.

அவர்களால் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக இந்திய ராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் உடனடியாக ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு பனிச்சரியில் சுரங்க பாதைக்குள் மாட்டிக்கொண்ட 172 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர். பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.