தென்காசி, ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (32) இவரின் மனைவி இசக்கியம்மாள். இதே பகுதியைச் சேர்ந்த முருகன் (41) என்பவருக்கும் இசக்கியம்மாளுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் வேலுச்சாமி மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதை மனைவி ஏற்காத நிலையில் முருகனுடன் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி, முருகனின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு மனைவியிடம் சென்று ‘உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார்’ என்று கூறியுள்ளார். இச்சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.