டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவன் வளாகத்தில்உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என மத்திய அரசு மாற்றியுள்ளது. முதல் பிரதமர் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமான தின் மூர்த்தி பவனை, கடந்த ஆண்டு பிரதான மந்திரி சங்கரஹாலயாவாக அரசு மாற்றியது. கடந்த 1966 ஆம் ஆண்டு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் இங்கு நிறுவப்பட்டது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.