மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. தற்போது வரை 13 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையினுள் 14 ஆவது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் விவசாயிகளின் கணக்கில் 2,000 மத்திய அரசு டெபாசிட் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், 13வது தவணையில் 2,000 பெறாத விவசாயிகளுக்கு இம்முறை 4,000 ஆக அவர்களின் கணக்கில் வரவுள்ளது.