நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் வங்கிகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வந்தனர்.

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கடைசி தேதி அக்டோபர் ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே  உள்ளதால் மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக அருகில் உள்ள வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம் எனவும் அக்டோபர் எட்டாம் தேதியில் முதல் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.