ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகியாக இருந்து வந்த சுதாகர்(71) இன்று உயிரிழந்தார். இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி சுதாகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினி கண்கலங்கி அழுதார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிறகு பேட்டியளித்த ரஜினி, நீண்ட காலமாக என்னுடன் நட்புடன் இருந்த நல்ல நண்பனை நான் இழந்து விட்டேன். எனது நலனில் அக்கறை செலுத்திய சுதாகரை இழந்தது மிகப் பெரிய வருத்தம் என்று வேதனையுடன் கூறினார்.