தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் மங்காத்தா, என்னை அறிந்தால், கிரீடம், ஜீ, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தில்  த்ரிஷா நடிப்பதாக இருந்தது. இந்த நிலையில் இப்படத்திலிருந்து த்ரிஷா நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு காரணம்  விக்னேஷ் சிவன்தான் என கூறப்படுகிறது.

முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவுக்கு பதில் த்ரிஷாவைதான் நடிக்க வைக்க திட்டமிட்டு ஒப்பந்தம் செய்தனர். எனினும்  படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக த்ரிஷா அதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. அதை மனதில் வைத்துதான் விக்னேஷ் சிவன் தற்போது த்ரிஷாவை நீக்கியதாக தகவல் வெளியாகி வருகிறது.