பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 15 வருடங்களாக விஹெச்பி வட தமிழக தலைவராக இருந்து வந்த அவரது கணவர் சீனிவாசன் சமீபத்தில் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது வானதி சீனிவாசன் பாஜகவில் இருந்து விலகி விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக திமுகவினர் இந்த செய்தியை பரப்பி வருகிறார்கள். இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.