தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது. இதற்கு முன்னதாக ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்,

இந்நிலையில் தமிழகத்தில் பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் 2200 காலி பணியிடங்கள் உள்ளன. பணி நீக்கம் என்பது அரசின் நோக்கமல்ல என கூறிய அவர், கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு 18,000 ஊதியத்தில் தற்காலிகமாக பணி வழங்கப்படும். பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.