பெங்களூரில் 28 வயதான மோஷின் என்ற நபர், ஜே.பி.நகர் 5வது கட்டத்தில் உள்ள தனது வாடகை வீட்டில் சமையல் செய்தபோது திடீரென அதிக சத்தத்துடன் பிரஷர் குக்கர் வெடித்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது நண்பர் சமீர் காயமடைந்துள்ளார்.
இருவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் சுதந்திர தினத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு நடந்ததால், தேசிய புலனாய்வு அமைப்பு, உள்துறை பாதுகாப்பு பிரிவு மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், எந்தவிதமான வெடி பொருட்களும் கண்டறியப்படவில்லை.
இது ஒரு சமையல் விபத்து என்றே போலீஸ் கூறியுள்ளது. காயமடைந்த சமீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.