தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதை தவிர்க்கவும் மாணவர்களின் நலனை கருதியும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன என்ற தகவலை தெரிவிக்க உள்துறை போக்குவரத்து துறை செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.