மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மால்டா என்ற மாவட்டத்தை சேர்ந்த முர்செலிம்(10) என்ற சிறுவன் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளான். இந்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மீன் பிடிக்க சென்ற போது உள்ளூர் ரயில் தண்டவாளத்தின் கீழ் ஒரு பெரிய ஓட்டை இருப்பதை கண்டுள்ளான். அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த காஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் முன்பு தான் அணிந்திருந்த சிவப்பு சட்டையை கழற்றி காட்டியுள்ளான். உடனே ரயிலை நிறுத்திய லோகோ பைலட் தண்டவாளத்தில் இருந்த ஓட்டையை பார்த்து சிறுவனை வாழ்த்தினார். மேலும் சிறுவனின் சாமர்த்தியமான இந்த செயலை ரயில்வே துறையினர் பாராட்டினர்.