ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்து விஜயபுரம் பகுதியில் ஜேசு (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கிய பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் உமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், மரிய ஜெலினா (11) மற்றும் ஜெமி தெரசா (7) என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பிரபாகரன் மற்றும் இளையமகள் ஜெமிதெரசா ஆகியோர் இறந்துவிட்டனர். அதன் பிறகு உமா தன்னுடைய மூத்த மகளுடன் கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது சொத்து பிரச்சனை காரணமாக ஜேசு  உமாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இருப்பினும் ஊர் பெரியவர்கள் பேசியதன் மூலம் மீண்டும் கணவர் வீட்டில் வாழ ஆரம்பித்தார். அவருடைய மகள்  உமாவின்  பெற்றோர் வீட்டில் ‌ இருந்தார். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக உமாவை அவருடைய மாமனார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இது தொடர்பாக உமா தன்னுடைய தந்தையிடம் கூற அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது எரிந்த நிலையில் உமா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜேசுவை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.