ராமநாதபுரம் மாவட்டம் வசந்தநகர் பகுதியில் ரவிக்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் பரணி என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் ரவிக்குமார் மற்றும் பரணிக்கு இடையே குடும்பத்த தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் பரணித ன் மகனை அழைத்துக் கொண்டே பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் ரவிக்குமார் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார். இவருடன் அவருடைய அக்காள் கணவரின் தம்பியான கணேசன் என்பவரும் தங்கியுள்ளார். இதில் கணேசன் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மது குடித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கணேசன் என்னுடன் அறையில் தங்கக்கூடாது என்று கூறியுள்ளார். அதோடு அவரின் துணிகளை அள்ளி வெளியே வீசி உள்ளார். இதனால் ரவிக்குமார் அங்குள்ள ஒரு மரத்தடியில் படுத்து தூங்கியுள்ளார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத கணேசன் ரவிக்குமாரிடம் தொடர்ந்து தகராறு செய்ததோடு அவரை மூங்கில் கம்பால் தலையில் அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.