சென்னையில் ஜனவரி 6-ம் தேதி 46-வது புத்தக கண்காட்சி விழா தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சி விழா ஜனவரி 22-ம் தேதி வரை நடைபெறும். இந்த புத்தக கண்காட்சி தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 1000 அரங்குகள் அமைய இருக்கிறது. இந்த புத்தக கண்காட்சி விழாவை ஜனவரி 6-ம் தேதி மாலை 5.30 மணி அளவில்‌ ஒய்எம்சிஏ மைதானத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசு பணம் போன்றவற்றை வழங்குகிறார். அதோடு பபாசி சார்பில் சிறப்பு விருதுகளையும், தலா 10,000 ரொக்க பணமும் வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து ஜனவரி 16, 17, 18 ஆகிய தினங்களில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி திருவிழாவையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்கிறார்கள். இதற்காக 30 ஏசி அரங்குகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும் சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இது தொடர்பான விரிவான விவரங்கள் பபாசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நாளை வெளியிடப்படும். மேலும் அரங்குகளில் வைக்கப்படும் புதிய புத்தகங்கள் தொடர்பான தகவல்கள் பபாசியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.