மதுரை தென் மாவட்ட பாமக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து வெற்றி பெறும். ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அப்போதுதான் முடிவு செய்ய முடியும். திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்து விட்டது. இதனால் மாற்று கட்சியை மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் தேவையை பாமக நிறைவேற்றும்.

அதன் பிறகு பாமக கட்சியை பார்த்து அனைவரும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். இதனால்தான் விமர்சனங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. விமர்சனங்கள் வருவது நல்லது தான். நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறினார். மேலும் அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில், திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுவதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இப்படி திமுக மற்றும் அதிமுகவில் சலசலப்புகள் இருப்பதால்தமிழக மக்களிடையே பாமகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதைத்தான் அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக அப்படி சுட்டிக்காட்டியுள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.