மதுரை தென் மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சி தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அதிமுக கட்சி தொடங்கி 5 வருடங்களில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாமக கட்சி இன்னும் ஆட்சிக்கு வரவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. கடந்த 55 வருடங்களாகவே மக்கள் திமுக மற்றும் அதிமுக ஆட்சியால் தமிழக மக்கள் சோர்ந்து விட்டார்கள்.

எனவே 2026-ஆம் ஆண்டு பாமக உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று கூறினார். இதற்கு முன்பாக பாமக கட்சியை பார்த்து அனைவருக்கும் பயம் வந்துவிட்டதால் தான் விமர்சனங்கள் அதிக அளவில் வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். மேலும் அதிமுக கட்சியில் தற்போது அதிகரித்துள்ள உட்கட்சி பூசல்கள், திமுகவில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது, குடும்ப அரசியல் போன்ற சலசலப்புகளின் காரணமாக திமுக, அதிமுக ஆட்சியை மக்களின் நிராகரித்துவிட்டு புதிதாக பாமகவை வெற்றிபெற வைத்து ஆட்சிக்கு வர வைப்பார்கள் என்பதை தான் அன்புமணி ராமதாஸ் அப்படி மறைமுகமாக கூறியதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.