திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தற்செயலாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் நடிகர் சூர்யாவை சந்தித்தார். மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, “நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்தேன். அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அவர் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஆற்றிவரும் முயற்சிகளைப் பாராட்டினேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமன்றி, மனோ தங்கராஜ் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்கும் முயற்சி மற்றும் Good Vision Seva Trust மூலம் தன்னுடைய சமூகப் பணிகள் குறித்து சூர்யாவுடன் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார். “நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி, சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரை சந்தித்ததில் பெருமை,” என்று மனோ தங்கராஜ் தனது பதிவில் தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.