தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 19 வயது நிரம்பிய அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கண்டிப்பாக வாக்களிக்க செல்ல வேண்டும். அதன் பிறகு நீங்கள் வாக்களிக்கும் போது விரலில் வைத்த மையை உணவகங்களில் காண்பித்தால் 5% வரை தள்ளுபடி வழங்கப்படும். இந்த தள்ளுபடி ஏப்ரல் 20-ம் தேதி மட்டும் கிடைக்கும். அதோடு செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள உணவகங்களில் இந்த தள்ளுபடியானது வழங்கப்படும். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளவர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.