இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக நிர்வாகிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக்குழு இன்று 3ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. சிபிஐ உடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை இன்று காலை முடிந்தது. தொகுதிகள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும். சிபிஎம் கட்சி ஏற்கனவே போட்டியிட்ட மதுரை, கோவை தொகுதிகளுடன் கூடுதலாக தென்காசி, நாகை, கன்னியாகுமரி ஆகிய 3 தொகுதிகளையும் கேட்டு வருகிறது.

ஆனால் கோவை தொகுதியை மீண்டும் ஒதுக்குவதில் சிக்கல் உள்ளதாக தெரிகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணிக்கு வர முடிவு செய்திருப்பதால், கோவை தொகுதி மநீமவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், சிபிஎம் கட்சிக்கு கேட்ட தொகுதிகள் கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது.