
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கீழதோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அரவிந்த்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் அரவிந்த் தனிமையில் சந்திக்க சிறுமியை அழைத்துள்ளார். இதனை நம்பி சிறுமி ராஜா மடம் சவுக்கு தோப்பு பகுதிக்கு தனியாக சென்றார். அங்கு அரவிந்த் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் அரவிந்தின் நண்பர் சரண் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வருவதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் பொதுமக்கள் சிறுமியை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமி அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அரவிந்த், சரண் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.