தமிழகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் நடைபெறவில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அதன் பிறகு வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் விபத்துகள் ஏற்படும். இதைத் தடுப்பதற்காக இந்த வருடம் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதோடு கடற்கரை மணலிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இது போன்ற பல முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக புத்தாண்டு பண்டிகையின் போது எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. மேலும் தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து காவல்துறைகளின் சார்பாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்ததாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.