கடந்த ஆண்டு குரூப்-2 அறிவிப்பின் கீழ் 5529 பணி இடங்கள் நிரப்படப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குரூப்-4 அறிவிப்பின் கீழ் 7301 பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியது. அண்மையில் குரூப் 4 தேர்வுக்கான பணி இடங்கள் மேலும் 2500 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் சில தினங்களுக்கு முன் டிஎன்பிஎஸ்சி-ன் வருடாந்திர தேர்வு அட்டவணையானது வெளியிடப்பட்டது.

அவற்றில் குரூப்-1 தேர்வு குறித்த விபரங்கள் இடம்பெறவில்லை. அதன்பின்  சில தினங்களில் குரூப்-1 தேர்வு குறித்த விபரங்களுடன் திருத்தப்பட்ட அட்டவணையானது வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், வருடந்தோறும் கூடுதல் பணியிடங்கள் நிரப்ப தொடர்ந்து முயற்சி செய்வதாகவும், வருடாந்திர தேர்வு அட்டவணை முதற்கட்ட தகவல்களை தருவதற்காக மட்டும்தான் எனவும் விளக்கமளித்தது.

அந்த வகையில் பார்த்தால் கடந்த ஆண்டு வெளியாகி உள்ள குரூப்-4 தேர்வு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையான 9801 (7301+2500) விட இந்த வருடம் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறப்படுகிறது. அத்துடன் குரூப்-2 தேர்வு தொடர்பான விபரங்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.