தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நீங்கள் ஏப்ரலில் பாருங்கள். திமுக புள்ளைங்க இந்தோனேஷியாவில் மைனிங் வச்சிருக்காரு. ஒரு திமுக அமைச்சர் இந்தோனேசியாவில் சொந்தமாக போட்.சொந்தமாக துறைமுகம் ஒரு திமுக அமைச்சர் வைத்திருக்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டில் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. 70 ஆண்டுகளாக அப்படியே பொறுத்துக்கிட்டே இருந்தோம். அவங்க கேட்கட்டும், இந்த கேள்வியை அவங்க கேட்கட்டும்.

இந்த கேள்வியை அவங்க கேட்கட்டும்னு. ஆனால் இப்போ பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த லஞ்சத்தை ஒழிக்காமல், அடுத்த படி எடுத்து வைக்கிறதுல பிரயோஜனமே இல்லைங்க. இந்த பிரச்சனையை இன்னைக்கு முடிக்கணும். அதற்கு ஒரு கட்சிக்கு தைரியம் இருக்கணும். கேட்பதற்கு ஒரு கட்சிக்கு தைரியம் இருக்கணும்ல. ஒருத்தன் அந்த கட்சியை பார்த்து கேட்டான்.  உன் மேல எத்தனை ரைடு போட்டாங்க.

நீ எத்தனை டைம் ஜெயிலுக்கு போன ?  என்ன பார்த்து கேக்குறியா என்று ? ஆனால் இன்றைக்கு பிஜேபிக்கு அந்த தைரியம் இருக்கின்றது என்பதற்காக, இந்த கேள்வியை பிஜேபி கேட்குது. மாநிலத் தலைவராக இருக்கக்கூடிய நான் பிஜேபி சார்பாக இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு திமுகவில் இருக்கக்கூடிய முதலமைச்சர் இருந்து ஒவ்வொரு எம்எல்ஏக்கும் அதே பிரஸ்மீட்ல தனித்தனி சொத்து பட்டியல், மொத்தமாக இல்ல. நீங்க படிக்கணும் இல்ல…  மக்கள் எல்லாரும் படிக்கணும் இல்ல…  அதே வெப்சைட்டில் தனித்தனி.

முதலமைச்சருடைய மருமகன் கட்ட கூடிய வாட்ச் 14 கோடி ரூபாய். அது என்ன ? முதலமைச்சர் இதுவரை பயன்படுத்திய கார் என்ன ? முதல் அமைச்சர் இதற்கு முன்பு இருந்த போது  என்னென்ன வாட்ச் கட்டினாரு ? என்னென்ன பொருள் பயன்படுத்தினார் ? இப்ப என்ன பண்றார் ? கொஞ்சம் நுணுக்கமாகத்தான் இருக்கு. கொஞ்சம் ஆழமாக தான் இருக்கும்.  கொஞ்சம் காரமாக இருக்கும்,  கொஞ்சம் கசப்பாக இருக்கும். ஆனால் தமிழகம் இந்த கேள்வியை கேட்க வேண்டிய நேரத்திற்கு வந்துட்டோம் என தெரிவித்தார்.