தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  நான் திமுகவை பார்த்து இதே மாதிரி ( உங்களின் சொத்து பட்டியல் ) நீங்கள் கொடுங்கள் அப்படினா….  திமுகல ஒரு வட்டத் தலைவர் கொடுப்பாரா ? என்றாலே சந்தேகமா ?  இருக்கு. இருந்தாலும் நீங்க கேப்பீங்க என்கின்ற நம்பிக்கையில், என்னுடைய வாழ்க்கை முழுமையாக திறக்கிறேன். நீங்க கேப்பிங்க என்ற நம்பிக்கையில்….  இதில் மிக முக்கியம் என்னன்னா….

பிரஸ் மீட்ல, திமுக உடைய அமைச்சர்கள் – பினாமிகள் –  உறவினர்களுடைய சொத்து பட்டியல்களை வெளியிடப் போறோம். திமுக உடைய முதலமைச்சர், அவருடைய குடும்பம். சொத்து என்ன ?  எங்க வச்சிருக்காங்க ? நமக்கு தெரிஞ்ச வரைக்கும் பாத்தா 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டுது. எல்லாம் ஏப்ரல் மாதம் வரும். 2 லட்சம் கோடி ரூபாய் திமுக உடைய முதலமைச்சரில் இருந்து ஆரம்பித்து திமுகவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் தனித்தனி சொத்து பட்டியல்.

இல்லன்னே…. நான் எலக்சன் கமிஷன்ல கொடுத்துட்டேன். ஆமா எலக்சன் கமிஷன்ல,  என்ன கொடுத்தீங்க ?  முதலமைச்சர் எலக்சன் கமிஷன்ல சொத்துப்பட்டியலில் கொடுத்திருக்காரு. என்கிட்ட சொந்தமாக காரே  இல்லைன்னு. நாங்க எந்த கார் என  நாங்க சொல்றோம். உங்க பையன் லெக்சஸ் கார் வாங்கும் பொழுது, அதற்கு வரி கட்டாமல் இந்தியாவிற்குள்ள ஏமாத்தி கொண்டு வந்தப்ப, சிபிஐ கேஸ் போட்டாங்க. உங்க பையனுக்கு எதிரா… உங்களுக்கு எதிரா…. சிபிஐ_இல்  கொடுத்த சாட்சி டாக்குமெண்ட்டை  ஏப்ரல் முதல் வாரம் ரிலீஸ் பண்றோம் என தெரிவித்தார்.