கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 8000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
அதாவது தமிழகத்திற்கு கடந்த வருடம் நீதிமன்ற தீர்ப்பின் படி உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்காததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இதனால் உச்ச நீதிமன்றத்தை நாடி உரிய நீரை பெற்றோம். ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையிலும் கர்நாடக அரசு காவிரி நீரை தர மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மேலும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.