தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிவேல் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.