திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் எருது விடும் விழா களைகட்டியது. தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

100 மீட்டர் தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சிறந்த காளைகளுக்கு கிடா மற்றும் கன்று குட்டிகள் பரிசாக வழங்கப்பட்டது.