சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணசீலன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

மேலும் மளிகை கடை நடத்திவரும் தர்மன், ஜெயக்குமார் ஆகியோரின் கடைகளிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சுமார் 87 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் ஜெயக்குமார், தர்மன், குணசீலன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.