கர்நாடக மாநிலம் தம்கூர் மாவட்டம் பரக்கனஹல் தாண்டாவில் ரஞ்சிதா (23),பிந்து(21), சந்தனா (18) ஆகியோரின்  பெற்றோர்கள் பல வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டனர். இதன் காரணமாக இவர்கள் மூன்று பேரையும் அவரது பாட்டி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களது பாட்டியும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக  உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரும் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர்.

இதற்கிடையே இவர்களது வீட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை துர்நாற்றம் வீசியது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் மேற்கூறையை அகற்றி பார்த்த போது மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.