தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,341 கடைகள் மூலமாக மது வகையை விற்பனை செய்கிறது. ஏழு நிறுவனங்களிடமிருந்து பீர், 11 நிறுவனங்களிடமிருந்து மதுவகை கொள்முதல் செய்யப்படுகிறது. கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பும் மதுவகை கணினியில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கடைகளில் விற்பனை விவரம் கணினியில் பதிவு செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக கடை ஊழியர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் இதனை தடுப்பதற்காகமது விற்பனையை கணினிமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. மதுபானங்களை கிடங்குகளில் இருந்து கடைக்கு அனுப்புவது முதல் விற்பனை செய்து செய்வது வரை அனைத்தும் கணினி மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பார்கோடை ஸ்கேன் செய்த பிறகு விற்பனை செய்ய முடியும். இதனால் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்க முடியாது.