நாட்டின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான airtel தனது 5ஜி சேவைக்கான பிரத்தியேக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்ததாக கூறியுள்ளது. இது குறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஏர்டெல் 5ஜி சேவைக்கான பிரத்தியேக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 10 லட்சம் பிரத்தேக வாடிக்கையாளர்கள் என்ற இலக்கு எட்டப்பட்டது.
மேலும் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 30 நாட்களுக்குள் அந்த இலக்கை எட்டிய முதல் நிறுவனம் ஏர்டெல் நிறுவனம் ஆகும். இந்நிலையில் 2024 -ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து ஊர்களிலும், முக்கிய கிராம பகுதிகளிலும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.