ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்துள்ளன.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 அம்ச நிவாரண உதவிகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது. அதன்படி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறு மாதங்களுக்கு தேவையான ரேஷன் இலவசமாக வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினருக்கு ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல்ஸ் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.