ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்துள்ளன.

இந்நிலையில் ஒடிசாவில் ரயில் விபத்திற்கு பிறகு மீட்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விபத்தில் காயமடைந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பிஸ்வஜித் என்பவர் இறந்து விட்டதாக கருதி பிணம் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது சடலத்தை பார்க்க வந்த தந்தை மகனின் உடலில் அசைவு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் பலவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.