திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட வனத்துறைக்கு உட்பட்ட அய்யலூர் வனச்சரக அலுவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஹேமந்த் என்ற மகனும், கார்த்திகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்ற மணிகண்டன் காலை உணவு சாப்பிட்ட பிறகு அலுவலகத்தில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பணியாளர்கள் மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.