ஜெய்ப்பூரை சேர்ந்த ரிஷப் ஜெயின் 1-ம் வகுப்புக்கான பள்ளி கட்டண கட்டமைப்பை சமூக ஊடக தளமான X தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. ரிஷப் தனது மகளை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை. ரிஷப் பள்ளியின் முழு கட்டண அமைப்பையும் சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு பள்ளியின் மொத்த ஆண்டு செலவு சுமார் 4.27 லட்சம் என்றும் கூறியுள்ளார். அது மட்டும் அல்லாது இவ்வாறு கல்வி கட்டணம் இருந்தால் ஆண்டுக்கு ரூபாய் 20 லட்சம் சம்பாதித்தாலும் அந்த பள்ளியில் சேர்க்க முடியாது எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் தனது மகளை சர்வதேச தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்க தான் விரும்புவதாகவும், அதற்காக நகரிலுள்ள பல்வேறு பள்ளிகளின் கட்டணத்தை ஒப்பிட்டு பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பெரும்பாலான பள்ளிகளின் கட்டண கட்டணம் ஒரே மாதிரியாக இருப்பதை அறிந்து நீங்கள் வருத்தமும் ஆச்சரியமும் அடைவீர்கள் என்று ரிஷப் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் சேர்க்கை படிவத்தின் படத்துடன் தனியார் பள்ளியின் கட்டண அமைப்பை பகிர்ந்துள்ளார். அதில் பதிவு கட்டணம் ரூபாய் 2000, செயற்கை கட்டணம் ரூபாய் 4000, விபத்துக்கான பணம் ரூபாய் 5000, ஆண்டு பள்ளி கட்டணம் ரூபாய் 2.52, பேருந்து கட்டணம்  1,08,000 புத்தகங்கள் மற்றும் சீருடை ரூபாய் 20000, மொத்தம் 4,27,000 மேலும் ரிஷப் கூறுகையில் 1000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்களுக்கு இது எளிதானது அல்ல என்றும் கூறியுள்ளார்.