பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் தெலுங்கில் நடிகர் ராம் சரண் மற்றும் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் புதிய படங்களில் நடித்து வருகிறார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் தன்னுடைய அம்மா குறித்து பேசிய ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து  அவர் பேசியதாவது, என்னுடைய அம்மா ஆன்மீகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். வெள்ளிக்கிழமை முடி வெட்டக்கூடாது, கருப்பு நிறத்தில் உடை அணியக் கூடாது என்று என்னுடைய அம்மா அடிக்கடி கூறுவார்.

என் அம்மா உயிரோடு இருக்கும்போது இந்த நடைமுறைகளை நாங்கள் பின்பற்றினோம். என்னுடைய அம்மா ஆன்மீகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்ட நிலையில் அவருடைய மறைவுக்கு பிறகு அதை பின்பற்ற நான் நினைத்தேன். அதன்படி ஒவ்வொரு வருடமும் என் அம்மாவின் பிறந்தநாளில் கோவிலுக்கு செல்வேன். அப்படி நான் முதல் முறையாக கோவிலுக்கு செல்லும்போது உணர்ச்சிவசப்பட்டேன். இருப்பினும் எனக்கு மன நிம்மதியும் அமைதியும் கிடைத்தது. மேலும் இதனால்தான் எனக்கு ஆன்மீகத்தின் மீது அதிக நம்பிக்கை வந்தது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.