பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த படம் ரிலீஸ் ஆகி 28 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்தியன் 2 உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிரூத் திசையமைக்கும் நிலையில், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜூலை 12-ம் தேதி படம் வெளியாகிறது. இந்நிலையில் 28 வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்திய முதல் பாகம் ரீ ரிலீஸ் ஆகிறது. மேலும் அதன்படி ஜூன் 7-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தியன் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த தகவலை தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.