மேரி பாபின்ஸ்”, “தி ஜங்கிள் புக்” மற்றும் “சிட்டி சிட்டி பேங் பேங் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களின் பாடல்களை எழுதிய ரிச்சர்ட் எம்.ஷெர்மன் காலமானார். இவருக்கு வயது 95. இவர் அவருடைய மறைந்த சகோதரர் ராபர்ட் உடன் சேர்ந்து வால்ட் டிஸ்னியின் 1964 ஸ்மாஷ் “மேரி பாபின்ஸ்” சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலான சிம் சிம் செர்-ஈ”க்காக இரண்டு அகாடமி விருதுகளை வென்றார்.

ராபர்ட் ஷெர்மன் 2012 இல் 86 வயதில் லண்டனில் இறந்தார். வயது மூப்பு மற்றும்  நோய் காரணமாக ஷெர்மன் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.