கடந்த சில நாட்களாகவே நடிகர் ராகவா லாரன்ஸ் KPY பாலாவுடன் இணைந்து மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார். இந்த நிலையில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துக்காக தான் உதவிகளையும் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார். கஷ்டப்படுபவர்களுக்கு எந்த சுயநல நோக்கமும் இன்றி உதவி செய்து வருவதாக கூறிய அவர், தன்னைப் பார்த்து மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வருபவர்கள் என்ற நோக்கத்திற்காகவே வெளியில் தெரியும் படி உதவுவதாக தெரிவித்தார்.

என்னால் முடிந்த அளவு யாரிடமும் பணம் பெறாமல் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நான் உதவி செய்வேன். மாற்றம் என்ற அமைப்பின் மூலம் ஏழை மக்களுக்கு லாரன்ஸ் உதவி செய்து வரும் நிலையில் மாற்றம் என்பது தன்னலமற்ற சேவை என்றும் எதிர்பார்த்து செய்தால் அவை மாற்றமாக இருக்காது, அவை கடவுளுக்கு செய்யும் சேவை என தெரிவித்துள்ளார்.