தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் மதுப்பிரியர் ஒருவர் வாங்கிய பீர் வாங்கியுள்ளார். அதனை ஓப்பன் செய்ததும், அதில் இருந்து நுரை வரவில்லை என்பதால், பீரை ஒரு கிளாசில் ஊற்றி பார்த்தபோது, அது பீர் இல்லை வெறும் தண்ணீர் என தெரியவந்தது. இதனை அடுத்து டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் உரிய பதில் அளிக்காதலால் போலீசில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களில் கலப்படம் இருப்பது குடிமகன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.