90-ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் ஃபேவரைட் தொகுப்பாளினியான ‘பெப்சி’ உமா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிம்பு (STR) குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ள காணொளி ஒன்று எக்ஸ் (ட்விட்டர்) வலைதளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது. திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களை நேர்காணல் செய்த அனுபவம் கொண்ட பெப்சி உமா, சிம்புவின் நிஜமான குணத்தைப் பற்றி மேடையில் ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார்.
“நான் சினிமாத்துறையில் பார்த்த மனிதர்களிலேயே, மிகவும் அடக்கமாகவும், எந்த ஒரு கர்வமும் தலைக்கேறாமல் இருக்கும் மிகச்சிலரில் ஒருவர் சிம்பு தான்” என்று பாராட்டிப் பேசியுள்ளார். சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தில் இருந்தும், இத்தனை வருடப் பயணத்திற்குப் பிறகும் சிம்புவிடம் இருக்கும் அந்த எளிமையும், தலைக்கனம் இல்லாத குணமும் தன்னை வியக்க வைத்ததாக பெப்சி உமா அந்த வீடியோவில் நெகிழ்ந்து போயுள்ளார்.

'Pepsi Uma' about 'SilambarasanTR'🫠

“சினிமா துறையில நான் பார்த்ததுல ரொம்ப அடக்கமா, கர்வம் இல்லாம இருப்பவர்”❤️ pic.twitter.com/FVhp7TALCO
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) July 2, 2026

எப்போதும் எஸ்டிஆர் குறித்து வெளியாகும் செய்திகள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாவது வழக்கம் என்ற நிலையில், மூத்த கலைஞர் ஒருவர் சிம்புவின் உண்மையான நற்குணத்தைப் பாராட்டிப் பேசியுள்ள இந்த வைரல் வீடியோவை, அவரது ரசிகர்கள் சும்மா தீயா ஷேர் செய்து இணையத்தை அதிரவைத்து வருகின்றனர்.