போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் GPay, PhonePe போன்ற UPI அப்ளிகேஷன்கள் மூலம் புதிய மோசடி நடைபெற தொடங்கியிருக்கிறது. GPayவில் நமக்கு தெரியாத நபர் பணம் அனுப்பியது போல போலி மெஸேஜை அனுப்புவார் . அதே போல வங்கியில் பணம் வந்த மாதிரியும் ஒரு போலி மெஸேஜை ஃபோனுக்கு அனுப்பிவிடுவார். பின்னர் ஃபோன் செய்து, தெரியாமல் அனுப்பிவிட்டேன்., திருப்பிக் கொடுங்கள் என்று கேட்பார். நீங்கள் திருப்பி அனுப்பினால் உங்கள் பணம் காலி.