திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி விவசாயிடம் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய விவசாயி பவித்ரா சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அதாவது பவித்ரா பழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறையெடுத்து தாங்கியுள்ளார்.

அவருடன் வேறொரு பெண்ணும் இருந்த நிலையில் இவர்கள் இருவருடனும் விவசாயி தனிமையில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் பவித்ராவின் ஆண் நண்பர்கள் 3 பேர் திடீரென அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் விவசாயியை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.10,000 பணம் போன்றவற்றை பறித்தனர். தொடர்ந்து அவரை செல்போனில் படம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து மறுநாள் அந்த கும்பல் விவசாயிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பெண்களுடன் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அவர்கள் பழனியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பவித்ரா, காமாட்சி (25), பாலமுருகன் (37), லோகநாதன் (29), குணசேகரன் (40) உட்பட 5 பேரை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து கார்கள் மற்றும் செல்போன் போன்றவற்றை பரிமுதல் செய்தனர். மேலும் பவித்ரா விவசாயிடம் பணம் பறிக்க திட்டமிட்டு அவருடன் நெருங்கி  பழகியதோடு திட்டமிட்டு அவரை விடுதிக்கு வரவழைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.