தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இளைஞர் திறன் திருவிழா மற்றும் நேரடி வேலை வாய்ப்பு முகாம் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் 18 முதல் 35 வயது உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் அலகு கலை, அலங்கார ஆடை வடிவமைப்பு, சில்லறை வணிகம் கணினி உள்ளிட்ட பல பயிற்சிகள் தனியார் நிறுவனங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்படும். அதேசமயம் பயிற்சி முடித்தவுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் ஜனவரி 7ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.