நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர். சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில்சென்னையில் நேற்று  46வது புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய CM ஸ்டாலின், “அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த 75.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டங்களிலும், மக்கள் தங்களுக்கு தேவையான விருப்பமான புத்தகங்களை பெற முடியும். இதில் புத்தக விற்பனை மட்டுமின்றி, சிறப்பான இலக்கிய சொற்பொழிவுகளும் நடத்தப்படும்” என கூறினார்.